சனி, 6 நவம்பர், 2010

கவியரசு கண்ணதாசனின் ஆறு கட்டளைகள்

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி!
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி!

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும், வரும்
இன்பத்தில் துன்பம் பட்டாகும் – இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்! – நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!

உண்மை என்பது அன்பாகும் – வெரும்
பணிவு என்பது பண்பாகும் – இந்த
நான்கு கட்டளைகள் அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!

ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்!
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்!

இதில் – மிருகம் என்பது கள்ளமனம்
உயர் – தெய்வம் என்பது பிள்ளைமனம்
இந்த – ஆறு கட்டளை அறிந்தமனது
ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்!

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்

    தாங்கள் கண்ணதாசனின் வரிகள் மூலம் கூற விரும்புவது

    அந்த பாடலில் பல கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படையை தகர்கிறது (குறிப்பாக para : 3,4,5,6)

    பதிலளிநீக்கு